பேருந்து, ரயில்வண்டி, கார் போன்ற வாகனங்கள் இயங்க, எரிபொருள் அவசியம். அதுபோல, மனித உடல் ஆரோக்கியமாக செயல்பட உணவு உண்பது அவசியம். அதிலும் குறிப்பாக காலை உணவு. இரவு உறக்கத்திற்கு பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உணவு உட்கொள்வது அவசியமான ஒன்று. அப்போது தான் அந்த நாள் முழுவதும் உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் செயல்பட தேவையான ஆற்றல் உடலுக்கு கிடைக்கும். காலை உணவை தவிர்ப்பதால் சர்க்கரை நோய், வயிற்றுப்புண் போன்ற நோய்கள் பிற்காலத்தில் ஏற்படுகின்றன. எனவே, காலை உணவை கட்டாயமாக உண்ண வேண்டும்.

Leave a Reply