நம் அனைவருக்கும் பிடித்த விரும்பி அருந்தக்கூடிய பானம் தான் காஃபி.. அதன் நன்மை தீமைகளை பின்வருமாறு காணலாம்..🙂
நன்மைகள்:
- நமது ஆற்றலை அதிகப்படுத்துகிறது.
- உடலின் செயல்திறனை மேம்படுத்துகிறது.
- அளவாக எடுத்துக் கொள்ளும்போது மனதிற்கு உற்சாகத்தை தருகிறது.
- ஆரோக்யமான கல்லீரலுக்கு வழி வகுக்கிறது.
- நீரிழிவு நோய் (type 2 diabetes) வருவதற்கான அபாயத்தை குறைக்கிறது.
- இதய நோய் வராமல் பாதுகாக்கிறது.
- தலைவலியை குணப்படுத்துகிறது.
தீமைகள்:
- தூக்கமின்மையை உண்டாக்குகிறது.
- நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் போன்றவற்றை உண்டுபண்ணுகிறது.
- செரியாமையை உண்டாக்குகிறது.
- இரத்தத்தட்டுகளின்(platelets) செயல்திறனை தடுக்கிறது.
- கர்ப்பம் அடைவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.
- இரத்தத்தில் இரும்பு சத்து சேராமல் தடுக்கிறது.
- தாகம், வயிற்று எரிச்சல், சிறுநீர் கழித்தல், பேதி, வாந்தி போன்றவற்றை அதிகரிக்கிறது.
- மக்னீசியம் சத்தை உடலில் சேர விடாமல் தடுக்கிறது.
- இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.
“அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” என்பது போல குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக காஃபி எடுத்துக் கொள்வதால் அதன் நன்மைகளை விட தீய விளைவுகளே நமக்கு ஏற்படும்..
எனவே, அளவாக உண்போம். வளமாக வாழ்வோம்..🙂👍

Coffee-payanulla thagavalukku nandrigal…
Super Information Sir👍🏻👌
super tips