Agathikeerai(Sesbania grandiflora) | அகத்திக்கீரை

அகத்தினை சுத்தம் செய்யும் ஆற்றல் நிறைந்ததால், இது “அகத்திக்கீரை” என்று பெயர் பெற்றது.. இதன் ஒரு சில நன்மை தீமைகளைக் கீழே காணலாம்..🙏🙂

நன்மைகள்:

  1. உடலில் எழும் பித்தத்தை🔥 தணிக்கிறது.
  2. வயிற்றுப்புழுவைக்🐛 கொல்லும் ஆற்றல் உடையது.
  3. நீர்க்கோவை மற்றும் தலைவலி தீரும்.
  4. காயங்களை சரிசெய்ய உதவுகிறது.
  5. வாய்ப்புண், வயிற்றுப்புண், நாக்குப்புண், தொண்டைப்புண் குணமடைகிறது.
  6. சொறி, சிரங்கு, தேமல், படை குணமடைகிறது.
  7. இளநரை ஏற்படுவதைத் தடுக்கிறது.
  8. இக்கீரையில் சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நன்கு பால் சுரக்கும்.
  9. உதடு வெடிப்பை சரி செய்கிறது.
  10. உணவில் கலந்து கொடுக்கப்படும் விஷப்பொருட்களை முறிக்கும்.

குறிப்பு:

“முருங்கைக் கீரை வெந்து கெட்டது, அகத்திக்கீரை வேகாமல் கெட்டது” என்பது பழமொழி.. எனவே, அகத்திக்கீரையை நன்கு வேகவைத்து உண்ண வேண்டும்.

தீமைகள்:

  1. அகத்திக்கீரையை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில், இரத்தத்தை கேடுற செய்யும்.
  2. மருந்துகளின் செய்கையை கெடுக்கும். ஆதலால், மருந்தூட்டும் காலங்களில் நீக்கப்படுகிறது.
  3. உடல் வீங்கல், உடல் வெளுத்தல், வயிற்றுக் கடுப்பு, கழிச்சல் போன்றவற்றை உண்டாக்குகிறது
  4. ஜூரண சக்தியை குறைக்கிறது.
  5. வாயுப் பிரச்சினையை உண்டாக்குகிறது.

சிறப்பு:

அகத்திக்கீரையை தானமாக கொடுப்பது சிறப்பு. அதிலும், பசுக்களுக்குக்🐄 கொடுப்பதால் பூர்வ-கர்ம வினைகள் விலகும் என்பார்கள்..🙏🙂

இக்கீரையை உண்ணும், பசுவின்🐄 பாலில்🥛 உடலுக்கு நன்மை பயக்கும் பல நற்குணங்கள் நிரம்பி இருப்பதால், இப்பாலை🥛 அருந்துபவர்களுக்கு இக்கீரையை உண்பதால் ஏற்படும் நன்மைகள் அனைத்தும் ஏற்படும்.😀

ஶ்ரீ குமரன் மெடிக்யூர்,
ஹோமியோபதி மற்றும் சித்தா க்ளினிக்
குன்றத்தூர்.
http://sreekumaranmedicure.com/

Sree Kumaran Medicure
Homoeopathy & Siddha Clinic
Kundrathur.
http://sreekumaranmedicure.com/

நல்ல எண்ணங்களே வளமான வாழ்வு!!!

Stay Positive..😀😃

1 Comment

Leave a Reply

Your email address will not be published.


*