அகத்தினை சுத்தம் செய்யும் ஆற்றல் நிறைந்ததால், இது “அகத்திக்கீரை” என்று பெயர் பெற்றது.. இதன் ஒரு சில நன்மை தீமைகளைக் கீழே காணலாம்..🙏🙂
நன்மைகள்:
- உடலில் எழும் பித்தத்தை🔥 தணிக்கிறது.
- வயிற்றுப்புழுவைக்🐛 கொல்லும் ஆற்றல் உடையது.
- நீர்க்கோவை மற்றும் தலைவலி தீரும்.
- காயங்களை சரிசெய்ய உதவுகிறது.
- வாய்ப்புண், வயிற்றுப்புண், நாக்குப்புண், தொண்டைப்புண் குணமடைகிறது.
- சொறி, சிரங்கு, தேமல், படை குணமடைகிறது.
- இளநரை ஏற்படுவதைத் தடுக்கிறது.
- இக்கீரையில் சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நன்கு பால் சுரக்கும்.
- உதடு வெடிப்பை சரி செய்கிறது.
- உணவில் கலந்து கொடுக்கப்படும் விஷப்பொருட்களை முறிக்கும்.
குறிப்பு:
“முருங்கைக் கீரை வெந்து கெட்டது, அகத்திக்கீரை வேகாமல் கெட்டது” என்பது பழமொழி.. எனவே, அகத்திக்கீரையை நன்கு வேகவைத்து உண்ண வேண்டும்.
தீமைகள்:
- அகத்திக்கீரையை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில், இரத்தத்தை கேடுற செய்யும்.
- மருந்துகளின் செய்கையை கெடுக்கும். ஆதலால், மருந்தூட்டும் காலங்களில் நீக்கப்படுகிறது.
- உடல் வீங்கல், உடல் வெளுத்தல், வயிற்றுக் கடுப்பு, கழிச்சல் போன்றவற்றை உண்டாக்குகிறது
- ஜூரண சக்தியை குறைக்கிறது.
- வாயுப் பிரச்சினையை உண்டாக்குகிறது.
சிறப்பு:
அகத்திக்கீரையை தானமாக கொடுப்பது சிறப்பு. அதிலும், பசுக்களுக்குக்🐄 கொடுப்பதால் பூர்வ-கர்ம வினைகள் விலகும் என்பார்கள்..🙏🙂
இக்கீரையை உண்ணும், பசுவின்🐄 பாலில்🥛 உடலுக்கு நன்மை பயக்கும் பல நற்குணங்கள் நிரம்பி இருப்பதால், இப்பாலை🥛 அருந்துபவர்களுக்கு இக்கீரையை உண்பதால் ஏற்படும் நன்மைகள் அனைத்தும் ஏற்படும்.😀

nice info dr..