🌞கோடைக்கால பயனுள்ள தகவல்கள்☃😁

உணவு முறைகள்🍉🍊🍋

  1. உடலிலுள்ள நீர்ச்சத்து குறையாமல் இருக்க அதிகமாக நீர் அருந்த வேண்டும்.
  2. உடலுக்கு சூட்டை தரக்கூடிய உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது.
  3. மாமிச உணவை தவிர்ப்பது நல்லது.
  4. நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளான தர்பூசணி போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  5. தக்காளி சேர்த்து கொள்ளலாம். இதனால் சூரியனின் பாதிப்பினை அடையாமல் தவிர்க்கலாம்.
  6. அதிகமாக பழங்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் அதிக ஆற்றல் பெறலாம்.
  7. பழச்சாறு அதிகம் அருந்துவதன் மூலம் உடனடி ஆற்றல் பெறலாம்.
  8. சிட்ரஸ் வகை பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
  9. குளிர்பானங்கள்🥤🥫 , ஐஸ்கிரீம் 🍧🍨🍦, எண்ணெயில் பொரித்த உணவுகள்🥯🍕🍟🍜 போன்றவற்றை தவிர்ப்பது நல்லது..

குறிப்பு: வெயிலில் நடந்து செல்லும்போது குடை☔ உபயோகிப்பது நலம். கருப்பு நிற குடையை உபயோகிக்காமல் பல வண்ண குடையை பயன்படுத்த வேண்டும்.ஏனெனில், கருப்பு நிறம் வெப்பத்தை உள் வாங்கும் ஆற்றல் உடையது. மேலும் கருப்பு நிற உடையை தவிர்ப்பது நலம்..🙂

தளர்வான பருத்தி ஆடைகளை உபயோகிப்பது நல்லது..😎

உலக வெப்பமயமாதல் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் முன்பு இருந்த ஆண்டை விட வெப்பம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது..

இதனைத் தவிர்க்க நம்மால் இயன்றவைகைளை செய்யலாம்.

உதாரணமாக,. மரக்கன்றுகள் நடலாம். பக்கத்து தெருவில் காய்கறிகள் வாங்க இருசக்கர வாகனங்களை தவிர்த்து நடந்து செல்லலாம்..

இது போன்ற குறிப்புகளை பின்பற்றி கோடைக் கால நாட்களை மகிழ்ச்சியாக மாற்றிடுவோம்..😀😃😄😁💧☃

ஶ்ரீ குமரன் மெடிக்யூர்,
ஹோமியோபதி மற்றும் சித்தா க்ளினிக்
குன்றத்தூர் .
http://sreekumaranmedicure.com/

நல்ல எண்ணங்களே வளமான வாழ்வு!!!

Stay Positive..😀😃

1 Comment

Leave a Reply

Your email address will not be published.


*